8 ஓட்டுகள் என வதந்தி.. 134 ஆவது வார்டில் வெற்றியை ருசித்த பாஜக வேட்பாளர் !!

8 ஓட்டுகள் என வதந்தி.. 134 ஆவது வார்டில் வெற்றியை ருசித்த பாஜக வேட்பாளர் !!

Update: 2022-02-22 14:46 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. மேலும், கூட்டணியுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டவர் உமா ஆனந்தன். இந்த வார்டில் முதல் சுற்றில் உமா ஆனந்தனின் வாக்கு எண்ணிக்கை தவறாக சொல்லப்படுவதாக கூறி பாஜக பிரமுகர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் 8 ஓட்டுகளை மட்டுமே பெற்றதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் 5539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வார்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த கட்சி சார்பில் சுசீலா கோபாலகிருஷ்ணன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் அனுராதா களம் இறக்கப்பட்டிருந்தார். பா.ஜனதா சார்பில் உமா ஆனந்தன் போட்டியிட்டார். 

மூன்று சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதியில் பா.ஜனதா வேட்பாளர் உமா ஆனந்தன் 5539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 3503 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதிமுக வேட்பாளர் 2695 வாக்குகள் பெற்றார். 

உமா ஆனந்தனை பொறுத்தவரை அவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். நான் கோட்சேவின் ஆதரவாளர் என வெளிப்படையாக தெரிவித்து கொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு பாஜகவில் சீட்டு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in 

 

 

Similar News