3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!!
3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!!
வட மாநிலங்களில் மழை தொடர்வதால் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் மிகக்கடுமையாக பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சுவர் இடிந்து விழுந்து தெலங்கானாவில் 3 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் 15க்கும் மேற்பட்டோர் மழை பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடலோர மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேலும் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி ஜூன் மாதம் பெரும்பாலான பகுதிகள் மழை பெறாத நிலையில் ஜூலை மாதம் இந்தியாவின் பெரும்பாலான வடக்கு வட கிழக்கு மாநிலங்கள் மழை பெறுவது குறிப்பிடத்தக்கது.
newstm.in