ஆட்சி மாற்றம் நிச்சயம்.. அடித்து சொல்கிறார் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அமீர் கான்..!
ஆட்சி மாற்றம் நிச்சயம்.. அடித்து சொல்கிறார் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அமீர் கான்..!
“கோவா இயற்கை வளமும், செல்வச் செழிப்பும் உள்ள மாநிலம். கனிம வளம் நிறைந்த பகுதி. ஆனால், பாஜக அதைப் பற்றி சிந்திக்காமல், கோவாவின் வளங்களை சிதைத்து, கலாச்சாரத்தை அழித்துள்ளது” என, காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.
கோவா மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அமீர் கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கடந்த பாஜக ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக, மக்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பின் கோவா மக்களின் வாக்குகளை பெற்று காங்கிரஸ் ஆட்சி ஏற்படும்போது பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30% வழங்கப்படும் என தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பெண்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு 50% மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மாணவர்களுக்கு தரமான கல்வி, சுற்றுலா தளம் அனைத்தும் தரமான முன்னேற்றம் ஏற்படுத்தப்படும், அனைத்து தரப்பு மக்களும் சீரான வளர்ச்சி பெற காங்கிரஸ் கட்சியை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வலுப்படுத்த கை சின்னத்தில் வாக்களிப்பீர்.
பாஜக ஆட்சியில் கோவா மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளார்கள். கோவா இயற்கை வளமும் செல்வச் செழிப்பும் உள்ள மாநிலம். கனிம வளம் நிறைந்த பகுதி. ஆனால், பாஜக அதைப் பற்றி சிந்திக்காமல், கோவாவின் வளங்களை சிதைத்து, கலாச்சாரத்தை அழித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் கோவா யூனியன் பிரதேசம், கோவா மாநில அந்தஸ்து பெற்றது. காங்கிரஸ் ஆட்சியில்தான் கொங்கனி மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக்கப்பட்டது. கோவாவில் பல்கலைக்கழகம் விரிவாக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.