ஒரே நேரத்தில் 7 பேருடன் உறவு.. தனிப்பட்ட வாழ்க்கைக்காக இளம்பெண் பணிநீக்கம் !!
ஒரே நேரத்தில் 7 பேருடன் உறவு.. தனிப்பட்ட வாழ்க்கைக்காக இளம்பெண் பணிநீக்கம் !!
ஒரே நேரத்தில் கணவருடன் சேர்த்து 7 பேருடன் திருமணம் செய்து உறவில் இருந்ததால் பெண் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரோமானியா நாட்டைச் சேர்ந்தவர் எஸ்ஸாடா சின். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவரை, திடீரென நேரில் அழைத்து பணியில் இருந்து நீக்கியுள்ளது நிறுவனம். ஆனால், எதற்காக பணியில் இருந்து நீக்கினர் என தெரியாமல் பெரும் அதிர்ச்சி அடைந்தார் எஸ்ஸாடா.
பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கான உண்மையான காரணத்தை தெரிந்துகொள்ளத் தனது சக ஊழியர்களிடம் பேசியுள்ளார். அப்பொழுது தான் விஷயம் தெரிந்துள்ளது. எஸ்ஸாடா சின் தனது உடலுறவு விஷயத்தில் Dominatrix என்ற விருப்பம் கொண்டவர். அப்படி என்றால் ஆண் பெண் உடலுறவில் ஈடுபடும்போது இவர்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நினைப்பைக் கொண்டவர்.
அது மட்டுமல்ல இவருக்கு ஏற்கனேவ திருமணமாகியிருந்த நிலையில் தன் கணவர் இல்லாமல் 6 பேருடன் உறவில் இருந்துள்ளார். ஒரே நேரத்தில் 7 பேருடன் உறவிலிருந்தாலும் அதிலும் Dominatrix முறையிலேயே இருந்துள்ளார்.
இந்த விஷயம் எப்படியோ அவரது பாஸ்க்கு தெரியவர இதனால் தன் நிறுவனத்தின் நற்பெயர் கெட்டுவிடும் எனப் பயந்து இந்த பெண்ணை பணியிலிருந்து நீக்கியுள்ளார். அதற்கு இவர் சரியாக வேலை செய்ய வில்லை எனப் பொய்யாகக் காரணம் வேறு சொல்லியுள்ளார்.
இந்த தகவலை எஸ்ஸாடாவே தனது பாட்காஸ்ட் ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் தான் கணவர் தவிர 6 பேருடன் உறவில் இருப்பது தன் கணவருக்குத் தெரியும் என்றும், அவரே அதை அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
newstm.in