வெளியானது வலிமை.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் !!
வெளியானது வலிமை.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் !!
அஜித்குமார் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் 'வலிமை'. இந்தப் படத்தில் ஹிமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத்குமார், பாவல் நவகீதன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.
முன்னதாக பொங்கல் தினத்தன்று இந்தப் படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவலாலும், நூறு சதவிகிதம் தியேட்டர்கள் திறக்கப்படாததாலும் அடுத்தடுத்து படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் விரக்தி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கான அட்டகாசமான படமாக உருவாகி உள்ள வலிமை திரைப்படம் இன்று அதிகாலை முதல் திரையரங்குகளில் வெளியானது. இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே திரையரங்கிற்கு அஜித் ரசிகர்கள் படையெடுத்தனர். சில திரைஅரங்குகளில் ரசிகர்கள் உற்சாகத்தில் அஜித்தின் கட்-அவுட் மற்றும் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
காலை முதலே தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என மேலதாளத்துடன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்குமார் ரசிகர்கள் கொண்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை தான் திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது.
பைக் ரேஸ், ஆக்ஷன், ஆகாயத்தில் அதிரடி சண்டை என வலிமை பட காட்சிகள் அதகளம் செய்வதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
newstm.in