இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்.. நாளை அனுப்பிவைக்கும் தமிழக அரசு
இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்.. நாளை அனுப்பிவைக்கும் தமிழக அரசு
சென்னையிலிருந்து இலங்கைக்கு நிவாரணப் பொருள்களுடன் நாளை (புதன்கிழமை) கப்பல் புறப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அத்தியாவசிய பொருள்கள், உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்து பொருட்களும் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
அதேநேரத்தில் இலங்கை அரசை கண்டித்து அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் வன்முறை வெடித்து நாடு முழுவதும் பற்றி எரிந்தது. மேலும் பிரதமர் மகிந்தவும் பதவியைவிட்டு விலகினார்.
இதனிடையே, இலங்கை மக்களுக்கு உதவ நிவாரணம் வழங்க தமிழக மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று பல்வேறு அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் உதவிகளை வழங்கினர்.
இந்த உதவிப்பொருட்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய வெளியுறவுத்துறையும் அனுமதி அளித்தது. இந்நிலையில், சென்னையிலிருந்து கப்பல் மூலம் ரூ. 80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ. 15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பில் 137 டன் மருந்து பொருள்கள் நாளை காலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
newstm.in