மத நல்லிணக்கம்.. காவடி எடுத்து வந்த பக்தர்கள்.. தாகம் தணித்த இஸ்லாமியர்கள்..!

மத நல்லிணக்கம்.. காவடி எடுத்து வந்த பக்தர்கள்.. தாகம் தணித்த இஸ்லாமியர்கள்..!

Update: 2022-04-16 12:16 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோவில் திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று (15-ம் தேதி) 9-ம் நாள் திருவிழாவாக காவடி எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் பால்குடம் மற்றும் பால் காவடி, பன்னீர் காவடி, அக்னி காவடி, தொட்டில் காவடி, பறவை காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்தனர்.

அப்போது, பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய இளைஞர்கள் பிளாஸ்டிக் டிரம்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர். காவடி தூக்கி வந்த பக்தர்கள், அதில் இருந்த தண்ணீரை வெப்பம் தணிக்க பயன்படுத்திக் கொண்டனர்.

மேலும், இஸ்லாமிய இளைஞர்கள் குழாய் மூலம் தார்ச்சாலையை தண்ணீரால் நனைத்து வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தினர்.

காவடி எடுத்து வந்த பக்தர்கள் கால்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளித்தனர். தாகம் தீர்க்க குடிதண்ணீர் பாட்டில்களையும் வழங்கினர்.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News