சுதந்திர போராட்ட வீரருக்கு நினைவிடம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை !!

சுதந்திர போராட்ட வீரருக்கு நினைவிடம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை !!

Update: 2022-03-01 05:05 GMT

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் வாழ்ந்த தமிழ் சினிமாவில் 1931-ம் ஆண்டு முதல் பாடல் எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமைக்குறிய மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் இல்லம் கேட்பாரற்று கிடக்கும் நிலை உள்ளது.

இந்த இடத்தில் அவருக்கு அரசு நினைவிடம் அமைக்க வேண்டும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் அரசவையில் போர்ப்படைத் தளபதியாக இருந்த தானாதிபதி பிள்ளை, இவர் இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலக் எதிரான போரில், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு, அவரது உடல் நாகலாபுரத்திலும், தலை பாஞ்சாலங்குறிச்சியிலும் வைக்கப்பட்டது.

அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தை தமிழ்நாடு அரசு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர், நாகலாபுரம் வீதிகளில்  பிச்சை எடுக்கும் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News