இன்று சென்னை உள்ளிட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு! முழுவிவரம்!!
இன்று சென்னை உள்ளிட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு! முழுவிவரம்!!
சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளின் 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சியில் வார்டு எண் 51 , 179ஆவது வார்டு மறுவாக்குப்பதிவு நடைபெறும். மதுரையில் திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17க்கு மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அரியலூரில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு எண் 16இல் மறுவாக்குப்பதிவு நடைபெறும். திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25க்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்ட இடங்களான சென்னையில் பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் வார்டு எண் 179இல் 5059ஆம் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த மறுவாக்குப்பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
newstm.in