கட்டுப்பாடுகள் தளர்வு.. பள்ளி, அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை..!

கட்டுப்பாடுகள் தளர்வு.. பள்ளி, அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை..!

Update: 2022-03-15 14:27 GMT

கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. இதனால், அனைத்து நாடுகளிலும் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்துவது போன்றவை கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், அந்நாட்டு அரசு நேற்று முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.

அதன்படி, பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஹோட்டல்கள், மதுபான கூடங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றுக்கு செல்ல தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கியதற்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது சரியான நடவடிக்கை கிடையாது. கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்க வேண்டும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News