எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி.. வரும் 18ம் தேதி திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்..!

எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி.. வரும் 18ம் தேதி திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்..!

Update: 2022-03-15 12:40 GMT

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், வரும் 18-ம் தேதி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் 2022 - 2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினத்தன்று மாலையில் சென்னையில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதத்தில் யார், யாரெல்லாம் பங்கேற்க வேண்டும்..?, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த வகையில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்..?, அவை மாண்புகளை பின்பற்றுவது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News