தேர்தலில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தோல்வி !!

தேர்தலில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தோல்வி !!

Update: 2022-02-22 18:43 GMT

சமூக சமத்துவ படை தலைவரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி. சென்னை மாநகராட்சி தேர்தலில் அண்ணாநகர் மண்டலத்துக்குட்பட்ட 99ஆவது வார்டில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டார். 

இவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனான பரிதி இளம்சுருதி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே பரிதி இளம்சுருதி முன்னிலை பெற்றார். அதன்படி சென்னை மாநகராட்சி 99ஆவது வார்டில் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பரிதி இளம்சுருதி வெற்றி பெற்றுள்ளார். 

இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமியை தோற்கடித்துள்ளார். அவருக்கு 2 ஆயிரத்து 423 வாக்குகள் கிடைத்தது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி அண்மைக்காலமாக அதிமுக ஆதரவாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அவருக்கு அதிமுக வாய்ப்பு வழங்கியது. 

newstm.in

Similar News