நடிகர் விவேக் பெயரில் சென்னையில் சாலை!!

நடிகர் விவேக் பெயரில் சென்னையில் சாலை!!

Update: 2022-04-18 07:46 GMT

நடிகர் விவேக் பெயரை சென்னையில் உள்ள சாலைக்கு வைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவரும் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவருமான பூச்சி முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில் விவேக் பசுமை கலாம் இயற்கை காப்போம் அமைப்பு சார்பில் மறந்த  நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பூச்சி முருகன், அரசியலுக்கு வருவதற்கு நடிகர் விவேக்  ஆசைப்பட்டார் என்று அவருடனான பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

ன்னையில் ஏதோ ஒரு சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் என்று பெயர் அமைக்க வேண்டும் என்னிடம்  கூறியுள்ளனர். அதனை முதலமைச்சரிடம் மனுவாக கொடுப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

newstm.in

Similar News