மோடிக்காக ரூ.14 கோடியில் அமைக்கப்பட்ட சாலை ஒரே நாளில் சேதம்!!

மோடிக்காக ரூ.14 கோடியில் அமைக்கப்பட்ட சாலை ஒரே நாளில் சேதம்!!

Update: 2022-06-26 09:00 GMT

பிரதமர் மோடியின் வருகைக்காக பெங்களுருவில் அமைக்கப்பட்ட புதிய சாலைகள் ஒரே நாளில் சேதமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20ஆம் தேதி பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அறிவியல் கழகம், பொருளாதார பல்கலைக்கழம், மொம்மகட்டாவில் நடைபெற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வுகளை முடித்து விட்டு 4.30 மணிக்கு மைசூருக்கு புறப்பட்டு சென்றார். இவரின் இந்த 4 அரைமணி நேரத்திற்கு மட்டும் ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளிவந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி சென்ற சாலைகளில், மேடு பள்ளம் இல்லாதவகையில் புதிதாகத் தார்ச் சாலை அமைக்கப்பட்டது. இதற்கு மட்டும் ரூ.14 கோடி செலவு செய்யப்பட்டது.

மற்ற பணிகளுக்காக ரூ.10 கோடி கோடி என ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டது. இந்நிலையில் இரவு பெய்த கனமழையால் மோடி வருகைக்காக செப்பனிடப்பட்ட  சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து கூறியுள்ள பெங்களூரு மாநகராட்சி கனமழையால் இந்த சம்பவம் நடந்தது என்றும் சாலையின் முழு நீளமும் சேதமடைந்ததாகக் கூறுவது நியாயமில்லை என்றும் கூறியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News