வரலாற்றில் இப்படியொரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான ரோகித் சர்மா !!
வரலாற்றில் இப்படியொரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான ரோகித் சர்மா !!
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை பதிவுசெய்த முதல் அணியாக ரோகித் சர்மாவின் மும்பை அணி உள்ளது.
சச்சின் பிறந்த நாளைன நேற்று மும்பை- லக்னோ அணிகள் மோதின. இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பை அணி இப்போட்டியில் வெற்றிபெற்று வெற்றிப்பாதைக்கு திரும்பும் என அந்த அணியின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்
அதேநேரத்தில் மும்பை அணிக்கு ராசியான மும்பை வான்கடே மைதானத்தில் லக்னோ அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக், பத்து ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் அனல்பறக்க விளையாடினார் கேப்டன் ராகுல். 61 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் சதத்தை விளாசி மைதானத்தை அதிர வைத்தார்.
கடைசி வரை மும்பை அணி வீரர்களால் அவரை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் சதம் அடித்து கடைசி வரை அவர் களத்தில் நின்றார். லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியில், கேப்டன் ரோகித் சர்மா, வேகமாக ரன்கள் சேகரிக்க மற்றொரு புறம் இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர், டேவால்ட் பிரவிஸ், ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
கடைசி 5 ஓவரில் 70 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தப்போது பொல்லார்ட் களத்தில் இருந்தார். எனினும் அவரும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் அளித்தார். ஒட்டுமொத்தமாக மும்பை அணியால், 20 ஒவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
லக்னோ அணி நடப்பு தொடரில் 5ஆவது வெற்றியை பெற்றது. மும்பை அணி தொடர்ந்து 8ஆவது தோல்வியை பதிவுசெய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 8 தோல்வியை பதிவு செய்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது மும்பை அணி. அதேநேரத்தில் ஐபிஎல் சாம்பியன் கோப்பையை அதிக முறை பெற்ற அணியும் மும்பைதான்.
newstm.in