இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் கேப்டன்!!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் கேப்டன்!!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து இந்திய அணி வீரர்கள் அஜிங்கியா ரஹானே, சேத்தேஷ்வர் புஜாரா நீக்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவர் டி20 போட்டிக்கான துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 போட்டி தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டி ஆகிய இரண்டு போட்டி தொடர்களிலும் ஷர்துல் தாக்குருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த தேர்வு குழு தலைவரான சேத்தன் சர்மா அறிவித்துள்ளார்.
newstm.in