காதல் திருமணம்.. மகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை !!

காதல் திருமணம்.. மகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை !!

Update: 2022-05-29 18:15 GMT

காதல் கணவருடன் செல்வதாக கூறிய இளம்பெண், தந்தையால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் அண்மைக்காலமாக ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் மீண்டும் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் நர்னூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (25) என்ற இளம்பெண், அபகுதியைச் சேர்ந்த ஷேக்அலிம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் சில ஆண்களாக நெருங்கி காதலித்துள்ளனர்.

இதையறிந்த ராஜேஸ்வரியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்துள்ளனர். இதனிடையே காதலர்கள் இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் மகாராஷ்டிரா சென்று அங்கு வாடகை வீட்டில் வசித்தனர்.

இதற்கிடையில் தேவிதாஸ், தனது மகளை காணவில்லை என அதிலாபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்த வந்தனர். இதையறிந்த ராஜேஸ்வரியும், ஷேக்அலிமும் தங்கள் கிராமமான நார்னூருக்கு கடந்த வாரம் வந்தனர். அந்த கிராமத்தில் ஊர் பெரியவர்கள் தலைமையில் பஞ்சாயத்து நடந்தது.

அப்போது, காதலர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். எனவே இருவரும் பிரிந்து விட வேண்டும் என கூறி ராஜேஸ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேஸ்வரி தனது கணவருடன் செல்வதாக கூறி வீட்டில் பெற்றோருடன் சண்டையிட்டுள்ளார்.

நீண்ட நேரம் நடந்த கடும் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த தேவிதாஸ், வீட்டில் இருந்த கத்தியால் மகள் ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரவியது. பின்னர் தகவலறிந்த அதிலாபாத் போலீசார் சம்பவ இடம் வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்ணின் தந்தை தேவிதாசை நேற்று கைது செய்தனர்.

newstm.in
 
 

Tags:    

Similar News