ரவுடி பேபி சூர்யா மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!!
ரவுடி பேபி சூர்யா மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!!
கோவையை சேர்ந்த பெண் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சூர்யா (எ) சுப்புலட்சுமி, 'ரவுடி பேபி' என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதேபோல, மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சிக்கந்தர்ஷா என்பவரும் வீடியோ பதிவிட்டு வந்தார்.
ஆபாசமாக பேசி அவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவர் மீதும் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு இருப்பதாக கொடுத்த புகாரை விசாரித்த கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த ஜனவரி மாதம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிக்கந்தர்ஷா மீது மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் "ரவுடி பேபி" சூர்யா மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்திருந்ததை ஏற்று மாவட்ட ஆட்சியர் சமீரன், ரவுடிபேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
newstm.in