ஜாமீனில் வந்த ரவுடி கொடூர கொலை.. 5 பேர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார் !!

ஜாமீனில் வந்த ரவுடி கொடூர கொலை.. 5 பேர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார் !!

Update: 2022-02-26 14:30 GMT

ஜாமீனில் வந்து தொல்லை கொடுத்த ரவுடியை கூட்டாளிகளுடன் சேர்ந்து இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.   

சென்னை திருவொற்றியூர் தண்டவாளத்தில் அருகே சடலம் ஒன்று கிடப்பதை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கொறுக்குப்பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தது சீனிவாசன் என்பதும்  உடல் பாகங்கள் தனித்தனியாக கிடந்ததும் தெரியவந்தது.

உடல் சிதறிக்கிடந்த இடத்தில், உடைந்த பாட்டில்கள், ரத்தக்கறை ஆங்காங்கே இருந்தது. இதை வைத்து, சீனிவாசனை கொலை செய்து, ரயிலில் அடிபட்டு இறந்து போல் தண்டவாளத்தில் உடலை வீசி விட்டு சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி, போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அதன்படி, சீனிவாசன் கொலையில் தொடர்புடைய திருவொற்றியூர், அண்ணாமலை நகர், 7ஆவது தெருவில் வசித்து வரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரகிமான் (19), ராஜேஷ் (23), தீனா (எ) மாமா (18), மணி (23), தினேஷ் (எ) மண்டை தினேஷ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சீனிவாசன், மண்டை தினேஷை மண்டையில் பாட்டிலால் அடித்து கொல்ல முயன்றுள்ளார். அந்த வழக்கில், சாத்தாங்காடு போலீசார் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வந்ததும் மண்டை தினேசுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால், நட்பாக பேசி, சீனிவாசனை மது அருந்த அழைத்து அவரை பாட்டில், கல்லால் அடித்து கொன்றுவிட்டு உடலை தண்டவாளத்தில் வீசியதாக மண்டை தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஜாமீனில் வந்த ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


newstm.in

 

Similar News