போலீஸூக்கே கொலை மிரட்டல் விடுத்த ரவுடி… தட்டி தூக்கிய போலீஸ்!!

போலீஸூக்கே கொலை மிரட்டல் விடுத்த ரவுடி… தட்டி தூக்கிய போலீஸ்!!

Update: 2022-03-23 08:50 GMT

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டாரக பணியாற்றி வரும் அர்ஜுனன் (48) ஸ்டேஷனின் பணியில் இருந்தபோது மணிமாறன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த செந்தில் என்கிற கலைவாணனை விசாரணைக்கு அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் செல்போனில் தொடர்பு கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனனை தகாத வார்த்தைகளால் திட்டி தான் ஒரு ரவுடி என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

ஃபோனில், தேவையில்லாம ரிஸ்க் எடுக்கவேண்டாம், ஒழுங்கா பாத்து இரு, சாவடிச்சு போட்டுருவேன்விடிஞ்சா நீ இருக்கமாட்ட.. என்கிற ரீதியில் மிரட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து சீர்காழி போலீஸார் கலைவாணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மிரட்டல் விடுத்த ரவுடியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கலைவாணன் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட போலீஸார் விரைந்து சென்று மிரட்டல் விடுத்த கலைவாணனை கைது செய்தனர். அவரின் மேல் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Similar News