பாலியல் புகாரை வாபஸ் பெற ரூ.1 கோடி பேரம்? – நடிகர் மீது பரபரப்பு புகார்!!

பாலியல் புகாரை வாபஸ் பெற ரூ.1 கோடி பேரம்? – நடிகர் மீது பரபரப்பு புகார்!!

Update: 2022-06-20 16:52 GMT

பாலியல் புகார் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி, மலையாள நடிகர் விஜய் பாபு ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியதாக பாதிக்கப்பட்ட நடிகை குற்றம்சாட்டியுள்ளார்

நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஒருவர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில் விஜய்பாபு தலைமறைவானார்

மேலும் நடிகை தன்னை பிளாக்மெயில் செய்வதற்காக பாலியல் புகார் கொடுத்திருப்பதாக அவர் கூறினார். ஜாமீன் கேட்டு விஜய்பாபு விண்ணப்பித்தபோது, விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து துபாயில் இருந்து கேரளா திரும்பிய விஜய்பாபு, விசாரணைக்கு ஆஜரானார். அப்போது பல்வேறு தகவல்களை அவர் வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில் வழக்கை வாபஸ் பெறும்படி, விஜய்பாபு தனது நண்பர்கள் மூலம் பேரம் பேசியதாக பாலியல் புகார் கூறிய நடிகை குற்றம் சாட்டி உள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News