தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம்! எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம்! எப்படி விண்ணப்பிக்கலாம்?

Update: 2022-03-25 08:03 GMT

தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு பெற விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் இரண்டாம் பரிசாக 60 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

எனவே பரிசு பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மாநில அளவில் விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100. மாவட்ட அளவில் விண்ணப்ப பதிவு கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.

இதற்கான அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியான நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.  விவசாயிகள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதே போல மாவட்ட அளவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் மானாவாரி பகுதிகளில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்து அதிக மகசூல் தரும் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசாக 5 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

newstm.in

Similar News