சித்திரை திருவிழா நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி..!!

சித்திரை திருவிழா நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி..!!

Update: 2022-04-16 12:37 GMT

மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரைத்திருவிழாவையொட்டி, இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு கோலாகமாக நடந்தது.இந்நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது வைகை ஆற்றின் கரை அருகே திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 5-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.மயக்கம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிகழ்வில் தற்போது இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு, படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்த 11 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


 

Similar News