ரூ.10 லட்சம் நிதியுதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
ரூ.10 லட்சம் நிதியுதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன். இவர், அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இருந்து ஷில்லாங்குக்கு செல்லும் வழியில் அவர் பயணித்த கார் மீது லாரி மோதிய விபத்தில் மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், மேகாலயா முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், “விபத்தில் இறந்த தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.