ரூ.10 லட்சம் கடன் உதவி… தமிழக அரசு அறிவிப்பு!!

ரூ.10 லட்சம் கடன் உதவி… தமிழக அரசு அறிவிப்பு!!

Update: 2022-05-17 08:11 GMT

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தனிநபர் கடன் தொகையை ரூபாய் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன், சிக்கன நாணயச் சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன்தொகை உச்ச வரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு இனி தனிநபர் கடன் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

வைப்பீடுகள் மீதான அதிகபட்ச வட்டிக்கு கூடுதலாக 2 சதவீதம் வட்டியுடன் 120 தவணைகளில் கடனை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல்  சிக்கன நாணய சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன் தொகை உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.

தனிநபர் கடனை வழங்கும் போது பணியாளர்களின் கூட்டுறவு கடன், நிதிநிலைமையை ஆய்வு செய்து கடன் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Similar News