ரூ.10 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ரூ.10 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Update: 2022-06-04 11:50 GMT

மதுரையில், மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளி சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில், குழாய் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மண்சரிவால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வீரணன் என்ற சதீஷ் (34) என்பவர் உயிரிழந்தார் என்ற தகவலைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.

உயிரிழந்த சதீஷ் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், தமிழ்நாடு அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய நிதியத்திலிருந்தும் ரூபாய் ஐந்து லட்சம் வழங்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News