துபாயில் ரூ.1,600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்!!
துபாயில் ரூ.1,600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்!!
துபாயில் தமிழ்நாடு அரசு மற்றும் அமீரக தொழில் நிறுவனங்கள் இடையே 1600 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக நேற்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கண்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து துபாயில் தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு ஐக்கிய அரசு அமீரக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், உலகளவில் புகழ்பெற்ற பல நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடுகளை செய்து வருவதாகவும், தொழில் புரிவதற்கும், முதலீடு செய்வதற்கும் தமிழகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத வகையில், தமிழர்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளது என்றார். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக துபாய் உள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ரூ.1,600 கோடி முதலீடு செய்ய அமீரக தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. நோபல் குழுமம் சார்பில் ரூ.1,000 கோடி முதலீட்டில் எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எஃகு தொழிற்சாலை மூலம் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வைட் ஹவுஸ் இண்டகிரேட்டட் தையல் தொழிற்சாலை ரூ.500 கோடி முதலீட்டில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
newstm.in