விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு.. விண்ணப்பிக்க இன்னும் 6 நாள் தான் இருக்கு..!
விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு.. விண்ணப்பிக்க இன்னும் 6 நாள் தான் இருக்கு..!
புதிய உள்ளூர் விவசாய தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கான பரிசு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், முதலில் செல்போனில் 'உழவன்' செயலி வழியே தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். குத்தகைக்கு சாகுபடி செய்வோரும் விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்ப படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் 100 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய ரசீதுடன், விண்ணப்பப் படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியும், புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 60 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 18-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.