அடேங்கப்பா.. இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சமாக அதிகரிப்பு !!

அடேங்கப்பா.. இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சமாக அதிகரிப்பு !!

Update: 2022-04-11 19:00 GMT

அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாக சரிந்ததால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் எரிபொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை என மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். 

குழந்தைகளுக்கான பல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.  

அதிபர் பதவிவிலகக்கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில், இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தங்கத்தின் பக்கமே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

காய்கறி கூட வாங்குவதற்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாக இலங்கை மக்கள் தங்கம் எங்க வாங்கப்போகிறோம் என கூறியுள்ளனர். 

 

newstm.in

 

 

Similar News