#BREAKING:- இவர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிவாரண நிதி.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!
#BREAKING:- இவர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிவாரண நிதி.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!
நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் புதிதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிவாரண நிதி வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகையாக இரண்டு முறை தலா ஆயிரம் ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியது.
இந்நிலையில், புதிதாக வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு நிதி உதவி வழங்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் அவர்களுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் புதிதாக பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம், மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட 6,810 கலைஞர்களுக்கு அரசின் சிறப்பு நிவாரண நிதியுதவி ரூ.2000 வழங்க கலை பண்பாட்டுத் துறை இயக்குநருக்கு நிர்வாக ஆணை வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.