திமுக பிரமுகரை தீர்த்துக்கட்ட ரூ.30 லட்சம்.. கூலிப்படை இளைஞர் கோர்ட்டில் சரண்..!
திமுக பிரமுகரை தீர்த்துக்கட்ட ரூ.30 லட்சம்.. கூலிப்படை இளைஞர் கோர்ட்டில் சரண்..!
சென்னை, மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம் (37). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன், திமுகவில் வட்டச் செயலாளராகவும் இருந்தார்.
நடைபெற்வுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 118 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தன் மனைவி சமீனாவுக்கு சீட் கேட்டிருந்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி இரவில், மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள தன் அலுவலகம் அருகே மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
செல்வம் கொலை வழக்கில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சஞ்சய் (21) என்பவர் உள்ளிட்ட கூலிப்படையினர் ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த, வியாசர்பாடியைச் சேர்ந்த அருண் (27) எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். கொரோனா பரிசோதனைக்குப் பின் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கூலிப்படையினர் மூலம் செல்வத்தின் உயிருக்கு 30 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம் மற்றும் சென்னையைச் சேர்ந்த இரண்டு ரவுடிகள் மூளையாக செயல்பட்டுள்ளனர்.
செல்வத்தை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியவர், கூலிப்படையைச் சேர்ந்த முருகேசன் என்ற தகவலையும் போலீசார் திரட்டி உள்ளனர். கொலையின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.