இறந்த யாசகர் வீட்டில் ரூ.3.49 லட்சம்.. ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி..!
இறந்த யாசகர் வீட்டில் ரூ.3.49 லட்சம்.. ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி..!
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தின் வேலங்கி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (75). இவர், அங்குள்ள சிறிய குடிசையில் தங்கி இருந்து கோவில்களில் யாசகம் பெற்று வந்தார்.
இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்தார். ராமகிருஷ்ணனுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், அப்பகுதி போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தபோது, சிறிய மூட்டைகளில் ஏதோ கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது, அதில் 2000, 500, 200, 100 ரூபாய் நோட்டுகளும் சில்லறை நாணயங்கள் இருந்தது. அவற்றை எண்ணிப் பார்த்தபோது, 3 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து முதியவர் ராமகிருஷ்ணன் உடலை தகனம் செய்த போலீசார், அவர் வைத்திருந்த பணம் சமூக அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என தெரிவித்தனர்.