தமிழகத்தில் இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!

தமிழகத்தில் இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!

Update: 2022-04-23 04:35 GMT

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

“தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவை இல்லை என ஒன்றிய அரசே கூறியுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம். சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்கள் உடல்நிலை சீராகவே உள்ளது.” என்று கூறினார்.

Similar News