1,200 குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

1,200 குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

Update: 2022-02-07 11:47 GMT

கொரோனா வைரஸ் தொற்றா பாதிக்கப்பட்டு இறந்த நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்த நபரின் வாரிசுதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து, உரிய ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

அதன் பின்னர், அவர்களின் வங்கிக் கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 1,200 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு மாதமாக தீவிரமாக இருந்ததால், மேலும் பலர் தொடர்ந்து விண்ணப்பித்து வருவதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற, வாரிசு சான்றிதழ் அவசியம் என்பதால், ஏராளமானோர் வாரிசு சான்றிதழ் கேட்டு அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.

Similar News