ரூ.76.50 லட்சம் மோசடி.. சரணடைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா..!

ரூ.76.50 லட்சம் மோசடி.. சரணடைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா..!

Update: 2022-04-20 13:50 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த குணசீலன் என்பவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா சத்துணவு துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 76.50 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால், வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.


இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடி வந்தனர்.

இதனிடையே, சரோஜா மற்றும் அவருடைய கணவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த  நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா  நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, 25 லட்சம் ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும், இருவரும் இரண்டு வாரங்களுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.76.50 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Similar News