வருவாய் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு ரூ.5000 பரிசு!!

வருவாய் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு ரூ.5000 பரிசு!!

Update: 2022-03-30 06:00 GMT

வருவாய் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு புத்தாண்டு பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்தியச் செலாவணி கையிருப்பும் குறைந்ததால் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளன.

இதனால் இலங்கையில் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அங்கிருந்து தமிழகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நிலைமையை சரி செய்ய இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவிகளை செய்து வருகின்றன. ஆனாலும், பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய முடியாமல் இலங்கை திணறி வருகிறது.

இந்நிலையில், வருவாய் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு புத்தாண்டு பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டையொட்டி இந்த தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த உதவி தொகையை பெறுவார்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

Similar News