உலகின் 2ஆவது பெரிய டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா தாக்குதல்!!

உலகின் 2ஆவது பெரிய டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா தாக்குதல்!!

Update: 2022-03-02 06:00 GMT

உக்ரைன் தலைநகர் கீவ்-இல் உள்ள உலகின் 2ஆவது பெரிய டிவி கோபுரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனுக்குள் புகுந்துள்ள ரஷ்யா தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகிறது. கடுமையான தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

தாக்குதலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறிவருகின்றனர்.

போர் நடைபெறும் சூழலில், நாட்டில் உள்ள இளம் வயது ஆண்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், அவர்கள் ராணுவ நடவடிக்கைகளில் பங்கெடுக்க வேண்டும் என்றும் உக்ரேன் அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இத்தகைய சூழலில், பெரும்பாலான பெண்கள், குழந்தைகளுடன் எல்லைகளை கடந்து செல்கின்றனர். குறிப்பாக, கடும் பனி சூழ்ந்துள்ள நிலையில், பல மணி நேரம் காத்திருந்த பிறகு பொதுமக்கள் எல்லையை கடக்கின்றனர்.

முன்னதாக ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கீவில் உள்ள உளவு அலுவலகங்களுக்கு அருகே உள்ளவர்கள் உடனடியாக வெளியேறுங்கள், அங்கே தாக்குதல் நடத்தப் போகிறோம் என தெரிவித்தது.

பெலாரஸ் நாட்டில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

Full View

newstm.in

Similar News