கட்டிடங்களில் தாக்குதலுக்கு அடையாளம் குறிக்கும் ரஷ்யா.. மக்கள் அதிர்ச்சி !!

கட்டிடங்களில் தாக்குதலுக்கு அடையாளம் குறிக்கும் ரஷ்யா.. மக்கள் அதிர்ச்சி !!

Update: 2022-03-01 19:45 GMT

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனின் கீவ், கார்கிவ் நகரங்கள் சிதைந்து வருகின்றன. இதனையடுத்து நேற்று இரு நாடுகள் இடையே அதிகாரிகள் மட்டத்தில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து இன்று ரஷ்யா ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். 

அந்த வகையில் கெர்சன், கார்கீவ், தலைநகர் கீவ் ஆகியவற்றின் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை அதிகரித்துள்ளது. உக்ரைனை நோக்கி 64 கி.மீட்டர் தூரத்திற்கு ரஷ்ய ராணுவ வாகனம் அணிவகுத்து நிற்கிறது. இந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் கீவ் போன்ற நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் ‘X’ குறியீடு இடப்பட்டுள்ளது. இந்த குறியீடு ரஷ்ய ராணுவத்தினரால் குறிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த குறியீடு உள்ள இடங்களை குறிவைத்து ரஷ்ய வான்வெளி தாக்குதல் நடத்துவதற்காக இப்படி செய்திருக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், குறியீடு இடப்பட்ட கட்டிடங்களுக்கு கீழ் கியாஸ் பைப் லைன் செல்வதால், இதனை குறிவைத்து தாக்குவதற்காக கூட குறியீட்டிருக்கலாம். 

இதனால், பொதுமக்கள் இதுபோன்ற குறியீட்டுகளை பார்த்தால் உடனடியாக அழித்துவிட வேண்டும் அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கீவ் நகரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்த தகவலை குறிப்பிடப்பட்டுள்ளது.


newstm.in

Tags:    

Similar News