ஒரே நேரத்தில் உக்ரைனின் 8 நகரங்களை குறிவைத்து தாக்கிய ரஷ்யா !
ஒரே நேரத்தில் உக்ரைனின் 8 நகரங்களை குறிவைத்து தாக்கிய ரஷ்யா !
உக்ரைன்-ரஷ்யா போர் தற்போது மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. தீவிர தாக்குதலில் ஈடுபட்டிருந்த ரஷ்யா அண்மையில் தாக்குதலை குறைத்தது. இந்த நிலையில், கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் மிகப்பெரிய போர் கப்பல் மீது தாக்குதல், எல்லைக்குள் புகுந்து குடியிருப்புகள் மீது உக்ரைன் ராணுவம் குண்டு மழை பொழிந்ததால், ரஷ்யா ஆத்திரமடைந்தது.
இதனால், உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் 8 நகரங்களில் அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ள டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்ய படைகள் தாக்குதல் தீவிரமடைவதால், தலைநகரை விட்டு வெளியேறியவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இப்போது திரும்ப வேண்டாம் என்று மேயர் எச்சரித்து உள்ளார்.
கிரோவோஹ்ராட் பிராந்தியத்தில் உள்ள ஒலெக்சாந்திரியாவில் உள்ள விமானநிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. குண்டு வீச்சால் செவரோடோனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களில் எரிவாயு குழாய்களும் சேதமடைந்தன. மரியுபோலில் தொடர் சண்டை நடந்து வருகிறது.
ரஷ்யா ராணுவ வெளியேறிய கீவ்வில் சுமார் 900 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மரியுபோலிலும் பொதுமக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சடலங்களை ரஷ்ய ராணுவம் தோண்டி எடுப்பதை மக்கள் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யா நேற்றும் மட்டும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கார்கிவ், மத்திய உக்ரைனில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், பொல்டாவா, கிரோவோஹ்ராட் மற்றும் தெற்கில் மைக்கோலைவ், கெர்சன் ஆகிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் குண்டு பொழிந்தது. லிசிசான்ஸ்க் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஆலை வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரஷ்யாவின்கார்கிவ் மற்றும் புறநகர் பகுதியில் 11 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தெற்கு மைக்கோலைவ்வில் வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.
newstm.in