ஈவு இரக்கமின்றி கண்ணி வெடிகளை வைத்த ரஷ்ய ராணுவம் ..!

ஈவு இரக்கமின்றி கண்ணி வெடிகளை வைத்த ரஷ்ய ராணுவம் ..!

Update: 2022-03-23 04:10 GMT

உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தால் புதைக்கப்பட்ட 90-க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை தனது அபார மோப்ப சக்தியால் கண்டுபிடித்த ஜாக் ரசல் இன நாய், உக்ரைன் ராணுவ வீரர்கள் மத்தியில் கதநாயகன் அந்தஸ்துடன் வலம் வருகிறது.

பேட்ரன் என பெயரிடப்பட்டுள்ள இந்த 2 வயது மோப்ப நாய், வெடிப்பொருட்கள் மற்றும் கண்ணிவெடிகளை கண்டறியும் அவசர சேவைகள் பிரிவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சிறிய கவச உடையில் வலம் வரும் பேட்ரனுக்கு, பாலாடைக்கட்டிகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், ஒவ்வொரு முறை கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் போதும் அதற்கு பாலாடைக்கட்டிகளை வழங்கி உக்ரைன் வீரர்கள் குஷிப்படுத்துகின்றனர்.


 

Tags:    

Similar News