கீவ் நகரை நெருங்கிய ரஷ்ய படைகள்.. 36 மணி நேரத்திற்கு ஊரடங்கு அறிவித்த உக்ரைன் !!

கீவ் நகரை நெருங்கிய ரஷ்ய படைகள்.. 36 மணி நேரத்திற்கு ஊரடங்கு அறிவித்த உக்ரைன் !!

Update: 2022-03-15 18:30 GMT

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரில் 36 மணி நேரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா இடையே தொடர்ந்து 20 நாட்களாக போர் நீடித்து வருகிறது. தொடக்க நாட்களை விட ரஷ்யாவின் தாக்குதல் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவர 4 கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையிலும் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்தநிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி வருகிறது. அதே சமயம் உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகிறது. இதனால், தொடக்கத்தில் அரசு அலுவலகங்களில் மட்டும் தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள், தற்போது பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் ஏவுகணைகளை வீசி தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்த மோசமான சூழலை தடுக்க பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் போர் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் தற்போது, உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கீவ் நகரில் ஊடரங்கு அமல் படுத்தி நகர மேயர் ஆணையிட்டுள்ளார். கீவ் நகரில் அந்நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணி முதல் மார்ச் 17ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்  நாட்டுமக்கள் பாதுக்காப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News