உக்ரைனில் அமெரிக்க பத்திரிகையாளரை சுட்டுக்கொன்ற ரஷ்ய படைகள் !!

உக்ரைனில் அமெரிக்க பத்திரிகையாளரை சுட்டுக்கொன்ற ரஷ்ய படைகள் !!

Update: 2022-03-14 07:02 GMT

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 19 ஆவது நாளாக இன்று நீடித்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.  ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

எனினும், உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி என தனது பலம் வாய்ந்த படையை கொண்டு தாக்கி வருகிறது ரஷ்யா. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.   இதுவரை 25 லட்சம் மக்கள் அகதிகளாகி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் அமெரிக்க நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், ரஷ்ய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனை உக்ரைன் போலீசார் உறுதி செய்துள்ளனர். 

51 வயது மிக்க அந்த பத்திரிகையாளரின் பெயர் Brent Renaud என தெரியவந்துள்ளது. அவர் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்காக முன்னதாக வேலை செய்து வந்துள்ளார். அவரது மரணத்தை அந்த பத்திரிக்கையும் உறுதி செய்துள்ளது. 

தங்கள் உயிரை காத்துக் கொள்ளும் நோக்கில் தஞ்சம் தேடி சென்று கொண்டிருந்த மக்களை அவர் படம் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது ரஷ்ய படையினர் அவரை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதே போல ரஷ்ய படையினரின் தாக்குதலுக்கு ஆளான மற்றொரு பத்திரிகையாளர் பலத்த காயமடைந்துள்ளார் எனவும் உக்ரைன் போலீசார் தெரிவித்துள்ளனர். 

newstm.in

Tags:    

Similar News