உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்: முதல் நாள் 137 பேர் பலி !

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்: முதல் நாள் 137 பேர் பலி !

Update: 2022-02-25 12:34 GMT

உக்ரைனை கைபற்றும் வகையில் அந்நாட்டுக்குள் புகுந்து ரஷ்ய படைகள் தாக்கியதில் முதல் நாள் மட்டும் 137 பேர் பலியாகினர். 

உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இதனால் இரு நாடுகள் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில், அந்நாட்டின் நேரப்படி நேற்று அதிகாலை 5 மணியளவில் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. தொடங்கியது முதல் அதிரடியாக புகுந்தது தாக்கியது. கிளர்ச்சி படையும் உக்ரைனை தாக்கியது.

ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டன. இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் அடங்கும். மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை.

நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். உக்ரைன் ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். கீவ் நகர் அருகே 14 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது: ரஷ்யா தொடுத்த போரை உக்ரைன் தனித்து எதிர்கொள்கிறது. நேட்டோவில் இணைக்கும் படி 27 ஐரோப்பிய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தும் யாரும் பதிலளிக்கவில்லை.

உக்ரைன் வீரர்கள் சரணடையாமல் உறுதியோடு போரில் பங்கேற்கின்றனர். ரஷ்ய தாக்குதலில், முதல் நாளில் மட்டும் 137 பேர் பலியாகினர்; 316 பேர் காயம் அடைந்துள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.
 

newstm.in

 

Similar News