கனடாவில் நுழைய ரஷ்ய அதிபருக்கு தடை.. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்..!

கனடாவில் நுழைய ரஷ்ய அதிபருக்கு தடை.. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்..!

Update: 2022-05-18 11:39 GMT

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கோ மென்டிசினோ கூறியதாவது: “உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு பிறகு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அவரது அரசு மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், புதின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்வது ரஷ்யாவை அதன் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும்” என்று மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.

Similar News