நிஜ வீரர் ஆன்லைன் ரம்மியால் சோக முடிவு.. ரூ.10,000 இல்லை என்பதால் விரக்தி !!

நிஜ வீரர் ஆன்லைன் ரம்மியால் சோக முடிவு.. ரூ.10,000 இல்லை என்பதால் விரக்தி !!

Update: 2022-02-28 19:15 GMT

ஆன்லைனில் ரம்மி விளையாட பெற்றோர் பணம் தரவில்லை என்பதால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்துள்ள குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடையைச் சேர்ந்தவர் இளைஞர் பிரகாஷ் (22). பட்டதாரி இளைஞரான இவர், தந்தையுடன் கட்டுமான பணி செய்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான பிரகாஷ், அடிக்கடி பணம் கேட்டு வீட்டில் தொல்லை கொடுப்பது வழக்கம் என்று தெரியவந்துள்ளது.

தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி தனக்கு ரூ.10 ஆயிரம் வேண்டும் என, பெற்றோரிடம் கேட்டுள்ளார். பெற்றோர் பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த 2 நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட பிரகாஷ், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

அவரது பெற்றோர் உடனடியாக பிரகாஷை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்தார். தருவைகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட பணம் இல்லாததால் பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே பிரகாஷ் ஆன்லைனில் ரம்மி விளையாடி அதற்கு அடிமையாகி இருந்தது தெரியவந்தது. சுமார் 3 லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

newstm.in

Similar News