விக்ரம் படத்தால் ட்ரெண்டாகும் ‘சக்கு சக்கு வத்திகுச்சி’ பாடல்.. எந்தப் படம் தெரியுமா ?

விக்ரம் படத்தால் ட்ரெண்டாகும் ‘சக்கு சக்கு வத்திகுச்சி’ பாடல்.. எந்தப் படம் தெரியுமா ?

Update: 2022-06-06 16:43 GMT

விக்ரம் படத்தில் இடம் பெற்ற பழைய பாடல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு இந்த பாடல் எந்த படம்? யாருடைய பாடல்? என்று ரசிகர்கள் தேடி கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக உயர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதிலும் கமல் பாடிய பத்தல பத்தல பாடல் அரசியல் சார்ந்தது. இதற்கு சில எதிர்ப்புகள் இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு பிறகு கமலின் வேற லெவல் குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது.  

இந்நிலையில் விக்ரம் படத்தில் இடம் பெற்ற பழைய பாடல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படங்களில் பாடல்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மாநகரம், கைதி படங்களில் பின்னணி இசை தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதேபோல் கைதி, விக்ரம் படத்திலும் முக்கியமான கட்டத்தில் இரண்டு பழைய பாடல்கள் ஒலிக்கும். கைதி படத்தில் காவல் நிலையத்தை சுற்றி வளைத்த ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க ஜும்பலக்கா ஜும்பலக்கா, ஆசை அதிகம் வச்சு என்ற பாடல் ஒலிக்கும்.

இதை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தில் ஆரம்பத்தில் காரில் சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற ஒலிக்கிறது. படம் பார்த்தவர்கள் இது என்ன பாடல்? எந்த படம் என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த பாடல் அருண்பாண்டியன் நடிப்பில் 1995 இல் வெளியான அசுரன் திரைப்படத்தில் வரும் பாடல்தான் அது. இதில் மன்சூர் அலிகானும் ஆடி இருப்பார்.  

*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}

" data-style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" data-width="811">Full View

newstm.in

Tags:    

Similar News