அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 34% ஆக அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக இருந்த நிலையில், அது 34ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படுள்ளது. இதன் மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் பென்சனர்கள் பயன்பெறுவார்கள்.
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு கூடுதலாக 9,544.50 கோடி ரூபாய் செலவாகும். அகவிலைப்படி என்பது பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகை. ஆண்டுக்கு ஜனவரி, ஜூலை என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.
அகவிலைப்படி என்பது அடிப்படை சம்பளத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒரு ஜூனியர் மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 18000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அதில் முந்தைய அகவிலைப்படி 31% என்றால் 5,580 ரூபாய்.
இப்போது அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி அதே அரசு ஊழியருக்கு அகவிலைப்படி 6120 ரூபாய் கிடைக்கும். அதாவது, அவருக்கு அகவிலைப்படி 540 ரூபாய் உயர்ந்துள்ளது.
newstm.in