மாதம் ரூ.62 ஆயிரம் சம்பளம்.. தமிழக சுகாதாரத்துறையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

மாதம் ரூ.62 ஆயிரம் சம்பளம்.. தமிழக சுகாதாரத்துறையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

Update: 2022-02-07 17:59 GMT

தமிழக சுகாதாரத் துறையில், கிராமப்புற சுகாதார செவிலியர் மற்றும் ஏஎன்எம் பணிக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அறிக்கை எண்: 2/MRB/2022

தேதி: 20.01.2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Village Health Nurse /Auxiliary Nurse Midwife

காலியிடங்கள்: 39

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டாண்டு ஏ.என்.எம் படிப்பு முடித்திருக்க வேண்டும். 2012க்கு முன் எனில் பத்தாம் வகுப்பு
தேர்ச்சியுடன் 18 மாத ஏ.என்.எம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01-07-2022 தேதியின்படி 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம்: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 20 சதவிகிதம், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 30 சதவிகிதம், ஏ.என்.எம் முடித்தவர்களுக்கு 50 சதவிகிதம் என வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 (ஆன்லைனில் செலுத்த வேண்டும்).

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 09.02.2022

மேலும் கூடுதல் விவரங்களை http://www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf என்ற இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Similar News