மாதம் ரூ.92 ஆயிரம் சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!
மாதம் ரூ.92 ஆயிரம் சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!
தேசிய புலானாய்வு முகமையில் காலியாக உள்ள 67 உதவி துணை ஆய்வாளர், தலைமை காவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 67
பணியிடம்: டில்லி, குவஹாத்தி, ஹைதராபாத், மும்பை, லக்னோ, ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, ராய்ப்பூர், ஜம்மு, சண்டிகர், இம்பால், சென்னை, ராஞ்சி, பெங்களூரு, போபால், புவனேஷ்வர், ஜெய்ப்பூர், பாட்னா, அகமதாபாத்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Sub Inspector - 43
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300 வரை வழங்கப்படும்.
பணி: Head Constable - 24
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,700 வழங்கப்படும்.
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 07.04.2022 மேலும் விவரங்கள் அறிய https://nia.gov.in/ அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19133_54_2122b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.