அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் சமுத்திரக்கனி படங்கள்..!!

அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் சமுத்திரக்கனி படங்கள்..!!

Update: 2022-05-08 13:50 GMT

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தொடர்ச்சியாக நடித்துவருகிறார் சமுத்திரகனி. கடந்த மாதங்களில் வெளியான பீம்லா நாயக், ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களில் கூட முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி நடித்திருந்தார்.

அந்தவகையில் தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. பரசுராம் இயக்கியுள்ள இந்தப் படமும் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது .

தொடர்ந்து, மே 13ம் தேதி தமிழில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகன் நடித்துள்ள டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. அடுத்தடுத்த நாட்களில் இரண்டு படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News